Home » செய்திகள் » தமிழ்நாடு அரசின் பாதம் பாதுகாப்போம் திட்டம் – அரசாணை வெளியீடு !

தமிழ்நாடு அரசின் பாதம் பாதுகாப்போம் திட்டம் – அரசாணை வெளியீடு !

தமிழ்நாடு அரசின் பாதம் பாதுகாப்போம் திட்டம் - அரசாணை வெளியீடு !

தற்போது தமிழ்நாடு அரசின் பாதம் பாதுகாப்போம் திட்டம் தொடர்பான அரசாணை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 80 லட்சம் நீரழிவு நோயாளிகள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வை பயணத்தில் “பாதம் பாதுகாப்போம் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முன்னோடித் திட்டமாகும்.

இத்திட்டத்தினை அரசு மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. tamilnadu government paatham kappom thittam for sugar patient foot infection

கிருமித்தொற்று காரணமாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவர்களின் கால்களை இழக்கும் அபாயத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் பாதம் பாதுகாப்போம் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 80 லட்சம் நீரழிவு நோயாளிகளின் கால்களை பரிசோதிக்க ரூ.29.62 கோடி நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திமுக ஆட்சியில் பங்கு வேண்டும் – முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம் !

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள், 36 அரசு மருத்துவக்கல்லூரிகளில் பாத பாதிப்பு கண்டறியும் மையங்கள் நிறுவப்பட உள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top