
தமிழக அரசு தொடர்ந்து மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. தமிழ்நாடு அரசின் AABC Scheme அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் மூலமாக, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு தொழில் செய்ய லோன் கொடுத்து வருகிறது.
TN Govt AABC Scheme: அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் மூலம் ரூ.1.5 கோடி பெறுவது எப்படி?

அதன்படி மக்கள் தங்களது தொழிலை தொடங்க அல்லது மேம்படுத்துவதற்காக வாங்கிய கடனுக்கான மூலதன மானியத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 35% மூலதன மானியத்தை வழங்கும். அதுமட்டுமின்றி இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 6% வட்டி மானியத்தை வழங்குகிறது.
விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் என்னென்ன?
- தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- SC/ST சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 55 ஆக இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
1: தமிழ்நாடு அரசின் குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2: திரையில், ” ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” மற்றும் “புதிய விண்ணப்பம்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
3: இதையடுத்து ‘பதிவு’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து. அதில் பெயர், பிறந்த தேதி, மெயில் ஐடி, ஆதார் எண் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
4: இதையடுத்து, ‘உள்நுழை’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அனைத்து கட்டாய விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
5: பின்னர் இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்களையும் பதிவேற்றி விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்கவும்.
திருவண்ணாமலை மகா தீபம் தரிசன டிக்கெட் 2024 – ஆன்லைனில் எப்படி பெறுவது தெரியுமா?
AABC Scheme அம்பேத்கர் திட்டம்தேவையான ஆவணங்கள்
1. தேர்தல் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையின் நகல்
2 பான் கார்டின் நகல்
3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
4. வயதுச் சான்றிதழ்
5. சாதி/சமூக சான்றிதழ்
6 குடியிருப்பு சான்றிதழ்
7 பேங்க் பாஸ்புக்
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024!
திடீரென ரஜினியை சந்தித்த சீமான் – அரசியலில் விஜய்க்கு வைத்த செக்!
இந்தியா- ஆஸ்திரேலியா பெர்த் 1st டெஸ்ட் போட்டி 2024