தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு. தற்போது கோடை காலம் ஆரம்பித்த நிலையில் சென்னையில் கோடை மழை பெய்ய தற்போதைய நிலவரப்படி வாய்ப்பு இல்லை. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு கோடை மழை வருகின்ற போது சற்று வெப்பத்தின் தாக்கம் குறையும். அத்துடன் தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அந்த வகையில் கத்திரி வெயிலை பொறுத்தவரை முதல் ஒரு வாரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மேலும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது,
கத்திரி வெயில் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் சற்று அதிகரித்து காணப்படும். மேலும் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாகத்தான் இருக்கும். அந்தவகையில் கால நிலை மாற்றம் மட்டுமே வெப்ப அலைக்கு காரணம் அல்ல. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது.
நாளை முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரம் – இந்த நேரத்தில் வெளியே வர வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை!!
அந்த வகையில் உள் மற்றும் வட தமிழகத்தில் கூடுதல் வெப்பம் பதிவாகலாம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெப்ப அலை அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.