தற்போது சூழ்நிலையில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பேருந்து படிக்கட்டில் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான செயல்களை செய்து வருகின்றனர். இதை தடுக்க போக்குவரத்து துறை மற்றும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இது மாதிரியான விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்காமல் இருக்க பணியாளர்கள் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளனர். அதாவது, காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகளில் உள்ள ஜன்னல் பகுதிகளில் தகரங்களை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் யாரும் படியில் தொங்காத நிலை ஏற்படும் என்பதால் மக்கள் பலரும் இந்த விஷயத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் விபத்துகள் குறையும் என்று மக்களால் நம்பப்படுகிறது.