தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 39 தொகுதியில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது தெரியுமா? முழு விவரம் இதோ!தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 39 தொகுதியில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது தெரியுமா? முழு விவரம் இதோ!

தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: மக்களவை தேர்தல் நடப்பாண்டில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது.  

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 – LIVE UPDATE… எந்த கட்சி முன்னிலையில் இருக்கு தெரியுமா?

  • தூத்துக்குடியில்  30,334 வாக்குகள் பெற்று கனிமொழி முன்னிலை வகித்து வருகிறார்
  • மத்திய சென்னையில்  11,657 வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை வகித்து வருகிறார்.
  • சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் தொல் திருமாவளவன் முன்னிலை வகித்து வருகிறார்.
  • விளவங்கோடு  தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலை வகிக்கிறார்.
  • சிவகங்கையில்  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
  • தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார்.
  • நீலகிரி தொகுதியில் ஆ.ராசா முன்னிலை வகித்து வருகிறார்.
  • கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை வகித்து வருகிறார்.
  • கரூர் மக்களவை தொகுதியில் மின்னணு வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
  • திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலை வகிக்கிறார்.
  • நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகிக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *