தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சி பிடித்ததில் இருந்து பொது மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் செயல்பட்டு வரும் நிலையில், குடும்பத் தலைவிகளின் வங்கியில் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட ஒரு கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. எனவே புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஏனென்றால் சில காரணங்களால் அரசு புதிய ரேஷன் கார்டுகளை விநியோகிப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் கடந்த வருடம் திருமணம் முடித்த தம்பதிகள் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், மக்களின் அவசியம் கருதி புதிய ரேஷன் அட்டைகள் மிக விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே புதிய ரேஷன் கார்டு விரைவில் வழங்க படுமேயானால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.