தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கனமழை:
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதனால் அதனையொட்டிய பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. முதல் இரண்டு வாரங்கள் சென்னை உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில் அவ்வப்போது ஏற்படும் காலநிலை மாற்றத்தால் தான் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும். மேலும் தமிழகத்தில் 6 முக்கிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு 2024… விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – உடனே Apply பண்ணுங்க மாணவர்களே!!
அதன்படி, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தின் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். weather report news in tamil – tamil weather news – weather center
டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு
புனே சொகுசு கார் விபத்து விவகாரம்