தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

தற்போது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கட்டணத்தை இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamilnadu Open University 15th Convocation 2024

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா வரும் அக்டோபர் மாதம் 21ம் தேதி அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து ஜூலை-2023, ஜனவரி-2024 ஆகிய பருவங்களில் முனைவர், ஆய்வியல் நிறைஞர், முதுநிலை, இளநிலை, பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்தப் பட்டமளிப்பு பருவத்தில் பட்டம், பட்டயம் பெறத் தகுதியுடையவர்கள் என பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தேர்வுக் கட்டணத்துடன் பட்டச் சான்றிதழுக்கான கட்டணத்தை செலுத்திய மாணவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும்.

அதே சமயம் கட்டணம் செலுத்தாதவர்கள் www.thou.ac.in என்ற இணையதளத்தின் வழியாக பட்டமளிப்பு விழா படிவத்தை நிரப்பியதுடன் ரூ.750 கட்டணத்தை இணையவழியிலோ அல்லது நேரிலோ செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் – ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே போட்டி !

அத்துடன் முனைவர் பட்டம் மற்றும் தரவரிசைப் பெற்ற ஆய்வியல் நிறைஞர், முதுநிலை இளநிலை, பட்டய மாணவர்கள் மட்டுமே பட்டமளிப்பு விழாவிற்கு நேரில் வருகைதந்து பட்டம், பட்டயம் பெற அனுமதிக்கப்படுவர்.

இதனையடுத்து மாணவர்களுக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் பிற மாணவர்களுக்கு பட்ட மற்றும் பட்டயச் சான்றிதழ்கள் அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கப்படும். Tamilnadu Open University Convocation

மேலும் இதுதொடர்பான முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள 044- 24306665 என்ற எண்ணிற்கோ அல்லது www.tnou.ac.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *