தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், அதில் இருந்து மக்களை குளிர்விக்கும் விதமாக ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது தமிழகத்தின் முக்கிய மாவட்டமான தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டி தீர்க்க போகிறது. குறிப்பாக கனமழை அதிகபட்சமாக 20 செ.மீ வரை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்