
தமிழகத்திற்கு ஒரே சமயத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை: கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே பயப்படுகிறார்கள். குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் ஏற்கனவே இருந்த அளவை விட அதிகமாக வெப்பம் இருந்து வருகிறது. இதனால் சில உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு மக்களை வெப்பத்தில் இருந்து காத்து கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி வானிலை மையமும் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” அரியலூர் மாவட்டத்தில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேலே கூறப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒரே சமயத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை