பள்ளி வாகனங்களுக்கு புது கட்டுப்பாடு…, நாளை வரை தான் கெடு.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!பள்ளி வாகனங்களுக்கு புது கட்டுப்பாடு…, நாளை வரை தான் கெடு.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

பள்ளி பேருந்துகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை தவிர்க்கும் விதமாக  பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் விதமாக அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி பேருந்துகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகமாக காணப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் அதை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

  • 2024-2025 கல்வியாண்டில் கண்டிப்பாக பள்ளி வாகனங்களில் ஒரு பெண் உதவியாளர் இருக்க வேண்டும்.
  • மேலும் அனைத்து பள்ளி பேருந்துகளிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • பள்ளி பேருந்து டிரைவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும்.
  • பள்ளி பேருந்தில் பணி புரியும் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்கு போக்சோ சட்ட விதிகளை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  • பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் உதவியாளர்கள் மது அருந்தி உள்ளார்களா என்பதை தினசரி  பள்ளி நிர்வாகம் செக் செய்ய வேண்டும்.
  • இது மட்டுமல்லாமல் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர் உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி நிர்வாகம்  தகவல் மேலாண்மை வளையதள பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை.., 18 மணி நேர போராட்டம் பிறகு மீட்பு.., கர்நாடகாவில் திக் திக் நிமிடம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *