ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம்
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் அரசு ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் ரேஷன் கடை மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களுக்கான தொகையை யுபிஐ ஆப் மூலம் செலுத்தலாம் என அரசு அறிவித்து இருந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதன் மூலம் பல பேர் பயனடைந்த போதிலும், யுபிஐ ஆப்-பில் 0.5 முதல் 1.1 சதவீதம் பரிவர்த்தனை கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்படுவதாக ரேஷன் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து யுபிஐ ஆப்பை பயன்படுத்த வட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தெளிவாக சொல்ல போனால், பொருள் வாங்கும் மக்கள் ல் யுபிஐ மூலம் பணம் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.