
தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மிக குறைந்த விலையில் ரேஷன் கடை வாயிலாக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் பரிசு தொகையை தமிழக அரசு வழங்கியது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்று புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இது குறித்து தமிழக அரசு பலதடவை ஊழியர்களை எச்சரித்தது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது ரேஷன் கடை ஊழியர்கள் பொது மக்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தாமல் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். மேலும் புகார்கள் எழுந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.