ரேஷன் கடைகளில் கிடைக்க போகும் புதிய பொருள்: தமிழகத்தில் கொண்டு வரப்படும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் முழுவதும் ரேஷன் கடை வாயிலாக தான் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் ஏழை எளிய மக்களுக்களின் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆவின் நிறுவனம் தனது பால் உபபொருட்களை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது தமிழ்நாடு அரசால் ஆவின் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பால், தயிர், பன்னீர், நெய், வெண்ணெய் மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் கிடைக்க போகும் புதிய பொருள்
மேலும் கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை மொத்த விற்பனையாளர்களாக நியமித்து பால் பொருட்களை விற்பனை செய்து வந்தது. இதனால் சுமார் 20 சதவீதம் லாபம் அதிகரித்தது. aavin milk
Also Read: திருவனந்தபுரம்: ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – கடைசியில் 135 பயணிகள் நிலை என்ன?
இந்த நிலையில், ஆவின் நிறுவனம் கூடிய விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஆவின் பொருள்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.tamilnadu ration shops
தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு
UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்?
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு
ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு