தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை நியாய விலை கடை மூலமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்காக பல நலத்திட்டங்களை ரேஷன் கடை வாயிலாகவே வழங்கி வருகின்றனர். சமீபத்தில் கூட முதல்வர் பொங்கல் பரிசாக பச்சரிசி, கரும்பு மற்றும் வெல்லம் உள்ளிட்டவைகளை ரேஷன் கடை மூலம் வழங்கி வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் பொது மக்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. அதாவது தற்போது தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருவதால் நியாய விலைக்கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ரேஷனில் ஒரு கிலோ உளுந்தம் பருப்பு மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில் தற்போது வரை அதை நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தை கை விடுவதற்கு பதிலாக அதில் உள்ள குளறுபடிகளை சரி செய்யலாம் என முதல்வருக்கு அதிகாரிகள் ஆலோசனை கூறி வருகின்றனர்.