உலக பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர – சந்தன மகாலிங்கம் மலை கோவிலுக்கு சென்று ஏராளமான சிவன் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி, பிரதோஷம், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் சிவனுக்கு பூஜை செய்யப்படும், அதை காண்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் வருகிற ஜனவரி 23ம் தேதி பிரதோஷம் மற்றும் ஜனவரி 25ம் தேதி தை பௌர்ணமி வர இருப்பதால் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை, அதாவது நான்கு நாட்களுக்கு மலை பாதையில் பக்தர்கள் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி தந்துள்ளனர். மேலும் செல்வது மலை பாதை என்பதால் எளிதாக தீப்பற்ற கூடிய எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்ல கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் சிவாலய பக்தர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.