தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான இறுதி தேர்வு தேதியை இந்த காரணத்திற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சகம் மாறியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்வு தேதி மாற்றம்:
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது 10ம் வகுப்புக்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சகம் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான இறுதி தேர்வு அடுத்த மாதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தது. இதற்கிடையில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பிறை பார்த்த பிறகு தொடங்க இருப்பதால் தேர்வை முன்கூட்டியே வைக்கும் படி பள்ளி கல்வித்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ” 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புக்கான அறிவியல் பாடத் தேர்வு ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது இந்த தேர்வின் தேதியை மாற்றி ஏப்ரல் 4ம் தேதியும், அதே போல் ஏப்ரல் 12 தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் பாடத் தேர்வு ஏப்ரல் 6ம் தேதியும் நடைபெறும்” என்று பள்ளி கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர்.