6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடப்பட்ட தொடர்
விடுமுறையை கொண்டாடி நேற்று முதல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நடைபெற இருக்கும் காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
அதன்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்கான தேர்வுகள் வருகிற செப் 20ம் தேதி தொடங்கி செப் 27ம் தேதி நிறைவடைகிறது.
அதே போல் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் வருகிற செப் 19 ம் தேதி தொடங்கி
செப் 27 ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6-10ம் வகுப்பு அட்டவணை:
செப்டம்பர் 20 | தமிழ் |
செப்டம்பர் 21 | விளையாட்டுக் கல்வி |
செப்டம்பர் 23 | ஆங்கிலம் |
செப்டம்பர் 24 | விருப்ப மொழிப்பாடம் |
செப்டம்பர் 25 | கணக்கு |
செப்டம்பர் 26 | அறிவியல் |
செப்டம்பர் 27 | சமூக அறிவியல் |
பிளஸ் 1 தேர்வு அட்டவணை
செப்டம்பர் 19 | தமிழ், பிற மொழிப் பாடங்கள் |
செப்டம்பர் 20 | ஆங்கிலம் |
செப்டம்பர் 21 | இயற்பியல், பொருளியல், தொழில் திறன் |
செப்டம்பர் 23 | கணக்கு, விலங்கியல், வணிகவியல், சத்துணவு, நர்சிங் |
செப்டம்பர் 25 | வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் |
செப்டம்பர் 26 | கணினி அறிவியல், கணினி பயன்பாடு, சிறப்பு தமிழ், மனையியல், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், அடிப்படை மின் பொறியியல் |
செப்டம்பர் 27 | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்/புள்ளியியல், தொழில் பாடங்கள் |
Also Read: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம் – மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
பிளஸ் 2 வகுப்பு அட்டவணை
செப்டம்பர் 19 | தமிழ் மற்றும் பிற மொழிப் பாடங்கள் |
செப்டம்பர் 20 | ஆங்கிலம் |
செப்டம்பர் 21 | இயற்பியல், பொருளியல், தொழில் திறன் |
செப்டம்பர் 23 | கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், தொழில் பாடங்கள் |
செப்டம்பர் 25 | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்/புள்ளியியல், தொழில் பாடங்கள் |
செப்டம்பர் 26 | தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில் பாடங்கள் |
செப்டம்பர் 27 | வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல். |