அக்டோபர் மாதம் அரசு விடுமுறைகள் 2024: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று முதல் 2ம் பருவம் ஆரம்பித்துள்ளது. இப்படி இருக்கையில் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2021-ம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் செயல்பட்டு வருகிறது.
அக்டோபர் மாதம் அரசு விடுமுறைகள் 2024
அதன்படி 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் கற்றல் திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் அக்டோபர் முதல் ஜனவரி வரை 4 மாதங்கள் வரை நடக்க இருக்கிறது. அதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்கி 10-ம் தேதி வரை முதற்கட்ட தேர்வு நடக்க இருக்கிறது.
அதேபோல் அக்டோபர் 22 முதல் 25ம் தேதி வரை 2ம் கட்ட தேர்வும், நவம்பர் 26 முதல் 29ம் தேதி வரை 3ம் கட்ட தேர்வும்,
ஜனவரி 28 முதல் 31ம் தேதி வரை 4ம் கட்ட தேர்வும் நடைபெறவுள்ளது.
தவெக முதல் மாநாடு நடக்குமா? தலைவர் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்!
அதற்கான வழி நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த வாரம் வியாழக்கிழமை வரை பள்ளிகள் இயங்கும். ஏனென்றால் வெள்ளி அன்று ஆயுத பூஜை, அக்டோபர் 12- விஜயதசமி (சனிக்கிழமை) என இரண்டு அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!
ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா?