
பள்ளி – கல்லுரிகளுக்கு விடுமுறை
பொதுவாக உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழா நடைபெறும் போது அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நாளை அதிகமாக கொண்டாடும் மாவட்டங்களான நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட இரு மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதன்படி இன்று அந்த இரு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி பங்குனி உத்திர திருவிழாவை சிறப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இன்று தேர்வு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மட்டும் இந்த உள்ளூர் விடுமுறை எடுபடாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 6ஆம் வேலை நாளாக கருதப்படும் என தெரிவித்துள்ளனர்.