Home » செய்திகள் » “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”- யை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் !மகளிர் கொள்கையின் சிறப்பம்சங்கள் பற்றிய முழு விவரம் !

“தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”- யை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் !மகளிர் கொள்கையின் சிறப்பம்சங்கள் பற்றிய முழு விவரம் !

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024

தமிழக பெண்களின் நலனை மேம்படுத்த “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” என்ற கொள்கை வரைவை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன் அடிப்படையில் சமூக நீதி, சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவான இந்தக் கொள்கை, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அல்லது புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கொள்கையை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்யவும் அரசு வழிவகை செய்துள்ளது.

பாலின உணர்திறன் கல்வி முறையை நிறுவுதல் மற்றும் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைதல்.

வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல்.

பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் புதிய தொழில் முயற்ச்சிகளுக்கு ஆதரவளித்தல்.

பெண்கள் அதிக ஊதியம் பெற வசதியாக டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்தல்.

அரசியல் களத்தில் பங்கேற்க பெண்களை ஊக்கப்படுத்துதல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top