தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் .. அறிக்கை வெளியீடு!!!தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் .. அறிக்கை வெளியீடு!!!

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்: தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளி மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக உதவிகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊக்கத்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் முறை தற்போது அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளி இயக்குநர்கள் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும். அதன் மூலம் அரசு வழங்கும் ஊக்க தொகைகள் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் பள்ளிகளில் வங்கி கணக்கு தொடர இரண்டு நிலைகளில் மேற்கொண்டு வருகின்றனர். முதல் நிலையில் 5 முதல் 10 வயதுக்குள் இருக்கும் மாணவர்களுக்கு தொடங்கப்படும் புதிய வங்கிக் கணக்கு அவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளரின் பெயரில் இணைக் கணக்காக ஆரம்பிக்கப்படும்.

எனவே இந்த கணக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து பராமரித்துக் கொள்ளலாம். 2ம் நிலையில் 10 வயதுக்கு மேல் இருக்கும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் நகல், மாணவரின் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் அவசியம். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுத்தவரை மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கி விட்டதா என்று கணக்கெடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வங்கி ஊழியர்கள் வரும் பொழுது அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர். தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் – tamilnadu school students news – government schools news – bank account – education department

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *