தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் அந்த நாளில் விடுமுறை என கூறி முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது 10ம் வகுப்புக்கான தேர்வும் முடிவடைய இருக்கிறது. அதுமட்டுமின்றி 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான இறுதி தேர்வு ஏப்ரல் 6ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சனிக்கிழமையான இன்று மற்ற மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்காமல் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதன் காரணத்தை பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் பேசுகையில், இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாறாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.