பொதுவாக மக்கள் தங்களை ரிலாக்ஸ் செய்வதற்காக சுற்றுலா தலங்கள் செல்வது உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் கொடைக்கானல், குற்றாலம் என பல்வேறு சுற்றுலா தலங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைப்பகுதிக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால் கடந்த கொஞ்சம் நாட்களாக மாஞ்சோலை மலை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் சுற்றுலா பயணிகள் கவலையில் இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களை குஷி படுத்தும் விதமாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாஞ்சோலை பகுதிகளுக்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மணிமுத்தாறு அணையில் குளிக்கவும், பஸ்களில் பயணிகள் செல்லவும் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர். அதற்கு மாறாக வாகனங்களில் மட்டும் செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.