தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததில் இருந்து சில முக்கிய பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. ஆனால் கடந்த சில வாரமாக மழை குறைந்து வரும் நிலையில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் உறைபனி நிலவி வரும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் டெல்டா, தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.