சுங்கச்சாவடி
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் தினசரி பெரும்பாலான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனம் தவிர மற்ற எல்லா வாகனங்களுக்கும், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும். இதனை தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் சுங்கச்சாவடிகளில் அளவுக்கு மீறி கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. அதன்படி மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த கட்டண உயர்வு விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த கட்டணம் உயர்வு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.