
தமிழ்நாட்டில் வைகை ஆற்றில் நீர் திறப்பு: தமிழகத்தில் கோடை காலம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் வழக்கத்திற்கு மாறாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் கோடை மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பெரும்பாலான விவசாய நிலங்களில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் பயிர்கள் சேதமடைந்து வரும் நிலையில், அதை தடுக்க மாநில அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே விவசாயி மக்கள் நலனை கருத்தில் கொண்டு, வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி வீதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் பொதுமக்கள் யாரும் கடக்கவோ அல்லது இறங்கவோ கூடாது என்று எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில் வைகை ஆற்றில் நீர் திறப்பு