தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் பொறுப்பில் வகித்து வந்தவர் தான் வெள்ளையன். சமீபத்தில் அவருக்கு நுரையீரலில் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்
இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவருக்கு திடீரென நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சென்னையில் இருக்கும் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ” வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டார். tamilnadu vanigar sangam leader
Also Read: தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. எனவே அவரின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும் இப்பொழுது, அவருக்கு ஆண்டிபயாடிக் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இல்லை என்றும் கொஞ்சம் கவலைக்கிடமாக உள்ளார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை