கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024 - இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் - லிங்க் இதோ !கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024 - இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் - லிங்க் இதோ !

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024. தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் இந்த மருத்துவக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி – ஏ.ஹெச்) 660 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு 597 மீதமுள்ள இடங்கள் உள்ளன.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) சுமார் 40 இடங்கள் உள்ளன

மேலும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கின்றன. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் ஆகியவை அகில இந்திய இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஓசூர் மாவட்டம் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. மேலே குறிப்பிட்ட 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகளை கொண்டது.

கால்நடை மருத்துவம், பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 மற்றும் 25ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஜூன் 3 ஆம் தேதி முதல் விண்ணப்பபதிவு தொடங்கப்பட்டு

வரும் 21 ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://adm.tanuvas.ac.in/

இந்த கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் அரசு பள்ளி மாணர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள்,

உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள்,

கரும்பு ஜூஸ் ஓவரா குடிக்கிறீங்களா?.. அப்போ இந்த ஆபத்து கன்பார்ம் – ICMR எச்சரிக்கை!!

கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *