
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் வேகமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் ஒவ்வொரு வருடமும் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் நாளை(மார்ச் 14) வெகு விமர்சையாக கொண்டாட பட இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

எனவே இந்த திருவிழாவில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாளை ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அலுவலகங்களில் குறைந்த பணியாளர்கள் வேலை செய்வார்கள் என்றும், அன்று ஏதேனும் தேர்வுகள் இருந்தால் கண்டிப்பாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை விடுமுறையை ஈடுகட்டும் விதமாக மார்ச் 23 அன்று பணி நாளாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.