Breaking News: மாணவர்களே குட் நியூஸ்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இப்படி இருக்கையில் தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் மாணவர்கள் ஹாப்பியாக இருந்து வருகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. schools and college leave
2 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
அதாவது ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு நாளை செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், நாளை மறுநாள் விருதுநகர் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது.
அங்கு வருகிற ஆகஸ்ட் 6ம் தேதி ஆடிப்பூர திருவிழாவையொட்டி பூஜை நடைபெற இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. local holiday
எனவே அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். Virudhunagar
Also Read: மக்களே ரெடியாகிக்கோங்க.. வந்தாச்சு பிஎஸ்என்எல் 5G சிம் கார்டு – எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
அதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 17ஆம் தேதி வேலை நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். Chengalpattu
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா