தமிழகத்தில் வாக்குப்பதிவு 3வது முறையாக திருத்தம்: தமிழகத்தில் கடந்த 19ம் தேதி கிட்டத்தட்ட 36 தொகுதிகளிலும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 6 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. மேலும் நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலில் 1,58,568 வாக்குப்பதிவு எந்திரங்களும் 81,157 கட்டுப்பாட்டு எந்திரங்களும் 8,685 VVPAT இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், தற்போதைய தேர்தலில் குறைவான சதவீதமே வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இரவு 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 72:09 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்த நிலையில், அதை நள்ளிரவில் மாற்றி, 69.46 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக அறிவித்தது. இதனால் அரசியல் கட்சியினர் குழம்பி போய் இருந்தனர். இந்நிலையில் மீண்டும் சதவீதத்தை மாற்றி தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடந்த 2024 மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.96 சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளது. இதற்கான முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.