
tamilnadu water analysis laboratory recruitment 2025: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், தர்மபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலியாக இருக்கும் Chemist, Laboratory Technician மற்றும் Laboratory Attendant உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . எனவே இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தகுதிகள் வேண்டும்? வயது எவ்வளவு இருக்க வேண்டும்? என்பது குறித்த முழு விவரம் இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை.
வகை:
தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைகள்.
பதவியின் பெயர்: Chemist
காலியிடங்கள் எண்ணிக்கை: 30
சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 21000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: B.Sc., or M.Sc., degree with Chemistry Additional certification in Data Entry or Office Management Computer knowledge in MS –Office (Word, Excel, PPT)
பதவியின் பெயர்: Laboratory Technician
காலியிடங்கள் எண்ணிக்கை: 30
சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 12th Standard with Biology Subject and Must have passed Diploma in Medical Laboratory Technology (DMLT) – 2 Years course approved by the Directorate of Medical Education.
பதவியின் பெயர்: Laboratory Attendant
காலியிடங்கள் எண்ணிக்கை: 30
சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8500 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Education to the Level of 8th standard pass, up to 12th standard.
பணியமர்த்தப்படும் இடம்:
சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், தர்மபுரி.
tamilnadu water analysis laboratory recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருக்கும் மேற்கண்ட மூன்று பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின்னர் அதனை பூர்த்தி செய்து, அதோடு தேவையான ஆவணங்களையும் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வருகிற 11.03.2025 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
UPSC இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2025! 37 காலியிடங்கள்! 40 வயதிற்குள் இருக்க வேண்டும்!
விண்ணப்பிக்கும் முகவரி:
சிவகங்கை – ராமநாதபுரம்:
நீர் ஆய்வாளர்,
பிராந்திய பொது சுகாதார நீர் பகுப்பாய்வு ஆய்வகம்,
அண்ணா நகர்,
திருநெல்வேலி, அஞ்சல் எண் – 627011
பெரம்பலூர், தர்மபுரி:
தலைமை நீர் பகுப்பாய்வாளர்,
தலைமை நீர் பகுப்பாய்வகம்,
219, பந்தய சாலை,
கோவை – 641018
தேவையான ஆவணங்கள்:
பிறந்த தேதிக்கான சான்று
கல்வி தகுதி சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ்,
சாதி சான்றிதழ்,
மாற்றுத்திறனாளி/விதவை/கணவனால் கைவிடப்பட்டவர்/மூன்றாம் பாலினத்தவர் சான்று.
ஆதார் அட்டையின் நகல்
அனுபவ சான்றிதழ்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 11/03/2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
சிவகங்கை மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ராமநாதபுரம் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
பெரம்பலூர் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
தர்மபுரி மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
குறிப்பு:
மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
இதனையடுத்து இதுபோன்ற மற்ற பிற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
IIFCL நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.99,750/- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
காரைக்குடி CSIR – CECRI நிறுவனத்தில் JRF வேலை 2025! தகுதி: Degree! Salary: Rs.42,000!