வானிலை மையம்
கடந்த சில நாட்களாக பருவநிலை தொடர்ந்து மாற்றம் அடைந்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த மூன்று நாட்களுக்கு (மார்ச் 19, 20, 21) மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெப்பநிலையானது வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதுமட்டுமின்றி நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மேலே குறிப்பிட்ட ஓரிரு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அது தவிர வெப்பத்தின் தாக்கம் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். எனவே வானிலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை இல்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.