Tamilnadu Rain Report: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தான் கனமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அதனையொட்டிய பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பொதுவாக சென்னையை பொறுத்தவரை உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது ஏற்படும் காலநிலை மாற்றத்தால் தான் சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், நீலகிரி, கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read: குழந்தை திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை – சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024: இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வான 82 வயது பாட்டி
நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்
புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை