Home » செய்திகள் » சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… அடுத்த 3 மணிநேரத்தில் மீண்டும் கனமழை?

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… அடுத்த 3 மணிநேரத்தில் மீண்டும் கனமழை?

சென்னை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் குடுத்துள்ளது.

சென்னை ஆரஞ்சு அலர்ட்

வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது தான் சென்னை மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2023 ம் வருடம் பெய்த கனமழை காரணமாக சென்னை , திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது. மக்கள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்பவே பல போராட்டங்களை சந்தித்தனர்.

JOIN WHATSAPP CHANNEL

மீண்டும் சென்னையில் கனமழை என்ற செய்தி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய நகரங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

குழந்தை வயிற்றில் டியூப்., உயிருக்கு ஊசலாடும் பரிதாபம்.., அரசு மருத்துவரின் அலட்சியத்தை சுட்டி காட்டிய பெற்றோர்கள்!!

Scroll to Top