தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாட்டில் கோடை மழை ஒரு சில பகுதிகளில் பொழிந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் கனமழையால் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
அதுமட்டுமின்றி இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை அதாவது அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது. weather report news – india weather center
வாகன ஓட்டிகளே.., இனி டிராபிக் ரூல்ஸை மீறினால் தப்பிக்க முடியாது செக் வைத்த சென்னை போக்குவரத்து காவல்துறை!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு