
தமிழகத்தில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் லிஸ்ட்: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த லோக்சபா மக்களவை தேர்தல் வாக்குகளின் முடிவுகள் நேற்று காலை 8 மணி முதல் வெளியாகி வந்தது. கிட்டத்தட்ட 18 சுற்றுகள் கடந்து நிலையில் பாஜக கூட்டணி(NDA ) தான் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் திமுக(DMK) ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் பாஜக கட்சி பெரும்பான்மையான வாக்குகள் பெறாததால் பிரதமர் குறித்து ஆலோசனை இன்று டெல்லியில் நடக்க இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகளிர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கட்சி வேட்பாளராக நின்று (5,40,729)அதிக வாக்குகள் பெற்று மற்ற கட்சியினரை டெபாசிட் கூட வாங்க விடாமல் வெற்றி வாகை சூடியுள்ளார் கனிமொழி கருணாநிதி. இதனை தொடர்ந்து, தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5,13,974 வாக்குகள் பெற்று வெற்றி கனியை ருசித்தார்.
மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட “நாம் தமிழர் கட்சி” … தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. நாதக கட்சியினர் கொண்டாட்டம்!!
கரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜோதிமணி 5,31,829 வாக்குகள் பெற்று வெற்றியை நிலைநாட்டினார். அதே போல் மயிலாடுதுறையில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் சுதா 5,18,459 வாக்குகள் பெற்று வெற்றி கொடியை ஏற்றினார். அதுமட்டுமின்றி தென்காசியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீகுமார் 4,25,679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2024 lok sabha election results – DMK party – Dravida Munnetra Kazhagam – Indian political party
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர்
தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024