தமிழகத்தில் இந்த 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ” வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில், தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இந்த 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
இதை தொடர்ந்து குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவான நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் ‘டானா’ புயல் உருவானது. அது படிப்படியாக வலுவடைந்து, தீவிர புயலாக உருமாறியது.
இதையடுத்து அந்த புயல், வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா -மேற்கு வங்காளம் இடையே, பூரி – சாகர் தீவுகளுக்கும் இடையில், இன்று காலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.
நெருங்கும் தவெக முதல் மாநாடு – தொண்டர்களுக்கு தலைவர் விஜய் எழுதிய பரபரப்பு கடிதம் – என்ன சொன்னார் தெரியுமா?
இதனால் இன்று முதல் அக்டோபர் 30ம் தேதி வரை பலத்த மழை பெய்யக்கூடும். அதன்படி திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை,கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பேய் மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த 19 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !
2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்