தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி கொஞ்சம் நாட்களே ஆன நிலையில், இப்பொழுது இருந்தே வெயில் தாக்கம் வரலாற்றை விட அதிகமாக வைத்துள்ளது. மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். சொல்ல போனால் மதிய வேலையில் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் மதிய நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் சுமார் 35 டிகிரி செல்சியஸை தாண்டி உக்கிரமாக இருக்கும். எனவே அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.