TANCET 2024. MBA / MCA ட்டப்படிப்புகளுக்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு. CEETA-PG – M.E./M.Tech./M.Arch./M.Plan. பட்டப்படிப்புகளுக்கு பொதுவான பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை. இந்த வருட TANCET & CEETA பொது நுழைவு தேர்வுகளின் தேதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை கீழே காணலாம்.
TANCET (MBA/MCA) :
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்பது வணிக நிர்வாகம் (MBA) & கணினி பயன்பாடு (MCA) போன்ற முதுகலை பட்டப் படிப்புகளை தமிழ்நாடு கல்லூரிகளில் படிப்பதற்கான தகுதித் தேர்வாகும்.
CEETA-PG:
பொதுவான பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை என்பது பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, திட்டமிடல் போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கான ஆட்சேர்க்கைக்குரிய பொது நுழைவுதேர்வாகும்.
இவ்விரண்டு தேர்வுகளுமே தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.
தற்போது TANCET மற்றும் CEETA 2024-2025 கல்வி ஆண்டிற்கான பொது தேர்வுக்கு அண்ணா பலக்லைக்கழகம் விண்ணப்பங்கள் வரவேற்க்கிறது.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 10.01.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் – 07.02.2024
விண்ணப்பிக்கும் முறை:
இரண்டு தேர்வுகளுக்குமே ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.
தேர்வு நாள்:
TANCET MBA தேர்வு – 09.03.2024 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
TANCET MCA தேர்வு – 09.03.2024 மதியம் 2.30 மணி முதல் 4.30 வரை
CEETA -PG தேர்வு – 10.03.024 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
TANCET தேர்வு எழுதத் தகுதி:
MBA – விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்ணுடன் 3 ஆண்டுகள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவினருக்கு 45% மதிப்பெண்கள்), அறிவியலின் துறையிலும் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
MCA – விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் அல்லது கணினி 3 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும்.
TANCET REGESTRATION | CLICK HERE |
CEETA REGESTRATION | CLICK HERE |
CEETA -PG தேர்வு எழுதத் தகுதி:
M.E. / M.Tech / M.Arch / M.Plan – விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் (ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவினராக இருந்தால் 45% மதிப்பெண்கள்) பெற்று சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விரிவான விபரங்களுக்கு அண்ணா பலக்லைக்கழத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ள அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.