1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி. கோடக் மகேந்திரா வங்கியின் அலட்சியம். வங்கியின் வாடிக்கையாளர் கணக்கிற்கு ரூ. 765 கோடி பணம் இருக்கின்றது என்று குறுந்செய்தி வந்துள்ளது. பணம் வந்தது எப்படி என்ற குழப்பத்தில் வாடிக்கையாளர் இருக்கின்றார்.
1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி ! கோடக் மகேந்திரா வங்கி தாராளம்
ரூ. 765 கோடி இருப்பு :
தஞ்சை மாவட்டத்தினை சேர்ந்தவர் கணேசன். அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகின்றார். இவர் கோடக் மகேந்திரா வங்கியில் ( Account ) கணக்கு வைத்து பயன்படுத்தி வருகின்றார்.
JOIN WHATSAPP | CLICKHERE |
இவர் நிறுவனத்தில் இருந்து சம்பளம் வாங்கிய உடன் Credit Cardக்கு செலுத்த வேண்டிய பணத்தினை நேற்று கட்டியுள்ளார். பின் தன் நண்பருக்கு அனுப்ப வேண்டிய 1000 ரூபாய் பணத்தினையும் இரவு 1மணியளவில் அனுப்பியுள்ளார். அப்போது இவரின் வங்கி கணக்கில் ரூ. 765 கோடி இருப்பு உள்ளது என்ற குறுந்செய்தி வந்துள்ளது.
வங்கியின் அலட்சியம் :
இரவு நேரம் என்பதால் காலையில் தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் கோடக் மகேந்திரா வங்கியை தொடர்பு கொண்டுள்ளார். வங்கியில் இருக்கும் கிளார்க் அவர்களிடம் குறுந்செய்தியை காண்பித்துள்ளார் கணேசன்.
வங்கி கணக்கில் பணம் இருப்பதை உறுதி செய்த பின் கிளார்க் வங்கி மேலாளரிடம் கூட்டிக் கொண்டு போகின்றார். கணேசனிடம் இருந்து குறுந்செய்தி மற்றும் குறுந்செய்தி வந்ததற்கான புகைப்படம் பெற்றுக்கொண்டு நாங்கள் உங்களை தொடர்பு கொள்கின்றோம் என்று கூறி அனுப்பி விட்டனர்.
சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதியானது ! ஆஸிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் !
குழப்பத்தில் வாடிக்கையாளர் :
வங்கி மேலாளரிடம் பணம் சார்ந்த தகவல்கள் கேட்டாலும் ஏதும் சொல்லவில்லை. பணம் ஏன் நம் கணக்கிற்கு இரவு நேரத்தில் வந்தது என பல குழப்பத்தில் இருக்கின்றார் கோடக் மகேந்திரா வங்கி வாடிக்கையாளர் கணேசன். தற்போது வரையில் வங்கியின் சார்பில் விளக்கம் ஏதும் அளிக்காமல் இருக்கின்றனர்.
இதே போன்ற நிகழ்வு கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி போன்றவைகளில் நடந்தது. வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்பப்ட்டு தவறாக அனுப்பப்பட்டது என்று கூறி பணத்தினை மீண்டும் வங்கி பெற்றுக்கொண்டது. இதேபோல் நிகழ்வு தற்போது கோடக் மகேந்திரா வங்கியில் நடந்துள்ளது. ஆனால் வங்கியின் சார்பில் தற்போது வரையில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.