
செக் மோசடி வழக்கில் தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தரமணி திரைப்படம் :
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகிய தரமணி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை ;
இந்நிலையில் தரமணி திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஜெ. சதீஸ்குமாருக்கு செக் மோசடி வழக்கில் 6 மாத சிறை தண்டனை வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் ககன் பேத்ராவிடம் 45 லட்சம் ரூபாய் கடனாக சதீஸ்குமார் வாங்கியுள்ளார். கொடுத்த கடனுக்கான காசோலையானது பணமின்றி திரும்பியுள்ளது. இதன் காரணமாக ககன் பேத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மோடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னா வாழ்க்கை வரலாறு – ஷாக்கான மாணவர்கள் பெற்றோர்கள்!!
இதனை விசாரித்த நீதிமன்றம் தரமணி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜெ.சதீஸ்குமாருக்கு செக் மோசடி வழக்கில் 6 மாத சிறை சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.