ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் !ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் !

தமிழ்நாட்டில் தற்போது ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் டெலிவிரி நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,

தமிழ்நாட்டில் பீர், ஒயின் மற்றும் மணமூட்டப்பட்ட மதுவகைகள் மற்றும் குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை ஆன்லைன் வழியாக டெலிவிரி நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாகவும்,

அத்துடன் திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மற்றும் மது உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியிடப்பட்டன.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்றும்,

மது பானங்களை ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதனை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை – சட்ட வரைவு மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் !

இந்நிலையில் ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் தொடங்கப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் தற்போது விளக்கமளித்துள்ளது.

அதில் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மதுபானங்களை விற்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும்,

அதுமட்டுமல்லாமல் டெட்ரா பாக்கெட் எனப்படும் காகிதக் குடுவையின் மூலம் மதுவை அறிமுகம் செய்யவும் தற்போது எந்தவித திட்டமுமில்லை எனத் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *