
இந்த இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக இருந்து வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் தேர்தலில் முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கேரளாவில் வருகிற ஏப்ரல் 26ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலை முன்னிட்டு கேரளாவில் இன்று (ஏப்ரல் 24) மாலை முதல் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை 6 மணி வரையிலும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடி இருக்க வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.