Breaking News: மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்: தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேல் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் தினசரி 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வருகிறது. விடுமுறை இல்லாமல் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடைகளுக்கு ஏதோ ஒரு நாளைக்கு மட்டும் தான் விடுமுறை கிடைக்கும்.
குறிப்பாக முக்கியமான விசேஷ நாட்களின் போது மக்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த விடுமுறை நாட்களில் மது பிரியர்கள் மதுபானம் இல்லாமல் திக்கி திணறி போய் விடுவார்கள். அந்த வகையில் தற்போது மது பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது. independence day
மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்
அதாவது, வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி(வியாழக்கிழமை) நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. எனவே அந்நாளில் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைத்து டாஸ்மாக் கடைகளை அன்று ஒருநாள் மட்டும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. august 15th
Also Read: தமிழக மக்களே 50 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் தொழிற் பயிற்சி – அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!
மேலும் தமிழக அரசின் உத்தரவை மீறி ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுபானங்களை விற்பனை செய்தால், காவல்துறை சார்பில் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்ட மதுபிரியர்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகின்றனர். tasmac shop
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு
தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு !
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்