மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக வருகிற ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 4829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தினசரி சராசரியாக 150 கோடிக்கும், வார இறுதி நாட்களின் போது ரூ.200 கோடிக்கும் விற்பனையாகி அரசு கஜானாவை நிரப்பி வருகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் அதை விட அதிகமாக இருக்கும். கடந்த பொங்கல் பண்டிகை நாளில் மொத்தம் 400 கோடிக்கு மேல் மது விற்பனையானது. இதை வைத்து பார்க்கும்போது நாடு முழுவதும் மது விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது.
ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து பெண்கள் போராட்டம் நடத்தி வந்தாலும் கூட, கடையில் கூட்டம் குறைந்த பாடில்லை. அதுமட்டுமின்றி எல்லா துறைகளிலும் விடுமுறை என்பது உண்டு. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு கிடையாது. குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்படும். அந்த வகையில் வருகிற ஜனவரி 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு.., தமிழக அரசு அறிக்கை வெளியீடு!!
அதன்படி, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் தமிழகத்தில் உள்ள எந்த வகையான பார் மற்றும் மது கடைகள் செயல்பட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?
இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் நாளை (22.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!