
தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: தமிழ்நாட்டில் சுமார் 4829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 120 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி வருகிறது. அதே போல மாதத்திற்கு 3,698 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை செய்கிறது.
தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை
குறிப்பாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தான் அதிகமாக விற்பனையாகி வருகிறது. மேலும் பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் வழக்கத்தை விட அதிகமாக மதுபானங்கள் விற்பனை ஆகும். மேலும் எல்லா துறைகளுக்கும் விடுமுறை என்பது உண்டு.
ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் ஆண்டுக்கு வெறும் எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் வருகிற அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது. அதாவது, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை விதிக்கப்படுவது வழக்கம்.
தவெக புதுச்சேரி பொறுப்பாளர் சரவணன் மறைவு – தலைவர் விஜய் இரங்கல்!
எனவே அக்டோபர் 28, 29 மற்றும் 30 மூன்று நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 31 ம் தேதி தீபாவளி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தீபாவளிக்கு முதல் நாள் டாஸ்மாக் கடை லீவு என்பதால் மதுபிரியர்கள் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?