
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்:
தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி உள்ள மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டமானது வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் ஜனவரி மற்றும் மே மாதம் 5 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 5 மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரூ.250 கோடி வருவாய்:
அத்துடன் டாஸ்மாக் கடைகளில் இருந்து திரும்ப பெறப்படும் காலி பாட்டில்களை விற்பனை செய்வதன் மூலம் தமிழக அரசுக்கு தலா ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக எவ்வளவு மதுபாட்டில்கள் விறக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு 70 லட்சம் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !
தமிழ்நாடு முழுவதும் அமல் :
அந்த வகையில் மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.
இதனை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த திட்டமானது காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.