டாஸ்மாக் கடையில் QR-CODE மூலம் மது விற்பனை செய்யும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
டாஸ்மாக் கடையில் QR-CODE மூலம் மது விற்பனை
தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேலான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு கிடைக்கிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஒரே நாளில் 100 கோடிக்கு மேல் விற்பனை நடக்கும். ஏன் விஜய், ரஜினி, அஜித் முன்னணி நடிகர்களின் படத்தின் கலெக்சனை விட வாரி குவித்து வருகிறது டாஸ்மாக் நிர்வாகம்.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் மது பாட்டில்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும். இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மது பாட்டில்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக தற்போது அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, மது பாட்டில் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலேயே, மதுபாட்டில்கள் மீது, விற்பனை விலையுடன் கூடிய ‘க்யூ-ஆர்’ கோடு ஒட்டப்படும்.
Also Read: புதிய ரேஷன் கார்டு வாங்குவோருக்கு ஜாக்பாட் – வெளியான குட் நியூஸ்!
அந்த ‘க்யூ-ஆர்’ கோடை பயன்படுத்தி அதனை ஸ்கேன் செய்து, மின்னணு பரிவர்த்தனையில் வாயிலாக மதுபிரியர்கள் பணம் செலுத்தி மதுபானங்களுக்கு பில்லை பெறும் வசதியை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த வசதியை முதலில் ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் தலா 10 கடைகளில் தொடங்கியுள்ளது. இதன் வரவேற்பை பொறுத்து தமிழகத்தில் மற்ற பகுதிகளில் கொண்டு வர அரசு தெரிவித்துள்ளது.
நெய்யில் கலப்படம் செய்தது உறுதி – கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை
இலவச தையல் இயந்திரம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா?
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா